உலகம் தகவல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு
மிகவேகமாக வளர்ச்சியடைந்து செல்கின்றது. எத்துறையிலும் கணனியும் தகவல்
தொழில்நுட்பமும் ஆதிக்கம் செலுத்துகின்றது. இன்று கணனியும் தகவல்
தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை. அந்த வகையில் எமது
சமூகம், சமயம், கலாச்சாரம் என்பன அதனுடன் சேர்ந்து வளர்ச்சி அடைய
வேண்டும் என்ற நோக்கில் இணையத்தளம் மூலம் எமது சமூக சமய பண்பாட்டு
விழுமியங்களை எமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில்
உருவாக்கப்பட்ட நிறுவனமே சைவக்குருமணிகள் மிஷன் ஆகும்.